மோடி மீண்டும் பிரதமர் ஆகக்கூடாது - கொந்தளித்த பிரகாஷ் ராஜ் முற்றுகையிட்ட பாஜக

நாட்டில் மதவாதத்தை விதைக்கும் புற்றுநோயாக பாஜக கட்சி இருப்பதாக பாரதிய ஜனதாவுக்கு எதிராக, தீவிரபிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நடிகர் பிரகாஷ் ராஜ் சாடியுள்ளார்.

Apr 14, 2018, 08:55 AM IST

நாட்டில் மதவாதத்தை விதைக்கும் புற்றுநோயாக பாஜக கட்சி இருப்பதாக பாரதிய ஜனதாவுக்கு எதிராக, தீவிரபிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நடிகர் பிரகாஷ் ராஜ் சாடியுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் மே 12-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. அதனொரு பகுதியாக, நடிகர் பிரகாஷ்ராஜ் பாஜக-வுக்கு எதிராக தீவிரப் பிரசாரம் மேற் கொண்டு வருகிறார்.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய நடிகர் பிரகாஷ்ராஜ், "இந்தியாவில் பல மொழி, சாதி,மதம், இன மக்கள் வாழும் உலகின்மிகப் பெரிய ஜனநாயக நாடாக உள்ளது.அனைத்து வகுப்பினரும் சுதந்திரமாக வாழும் உரிமை நமது அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.

அந்த உரிமையை பறிக்கும் வகையில் மத்தியில் ஆளும் மதவாத பாஜக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. பாஜக இந்த நாட்டை ஆளக்கூடாது.எல்லோர் மத்தியிலும் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் கட்சியாக பாஜக மாறிவிட்டது. சிந்தனையாளர்கள் கவுரி லங்கேஷ், கல்புர்கி ஆகியோரின் படுகொலைக்கும் அந்த வெறுப்புணர்வே காரணம்.

எந்த ஒரு பிரச்சனைக்கும் அவர்களிடம் தீர்வு என்பதே கிடையாது. ஏதாவது ஒரு மோதலை உருவாக்கி மக்களை பிரித்தாளும் வேலையைத்தான் அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். மோடி அரசு, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கைக்கூலியாக இருக்கிறது.

தென்மாநில மக்கள் மத்தியில் மதவாத விதையை விதைத்து வரும் புற்றுநோய் கட்சியான பாஜகவை யாரும் ஆதரிக்க மாட்டார்கள். மோடி மீண்டும் பிரதமர் ஆகக்கூடாது. கர்நாடகத்தில் பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது" என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே பிரகாஷ் ராஜின் பேச்சால், கடும் ஆத்திரமடைந்துள்ள பாஜக-வினர், வெள்ளிக்கிழமையன்று காலை பெங்களூரு கல்புர்கி நகரில்பிரகாஷ்ராஜ் வந்த காரை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading மோடி மீண்டும் பிரதமர் ஆகக்கூடாது - கொந்தளித்த பிரகாஷ் ராஜ் முற்றுகையிட்ட பாஜக Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை