வருவாய் வரவு செலவுத் திட்டத்தில் வருமான வரிச் சட்டத்தின் 80 சி பிரிவின் கீழ் வருமான வரி விலக்கு வரம்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உயர்த்துவார் என்று நிபுணர்களும் தனிநபர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.தற்போது, பிரிவு 80 சி இன் கீழ், பிபிஎஃப், ஐந்தாண்டு வங்கி எஃப்.டி, வருங்கால வைப்பு நிதி, செலுத்தப்பட்ட ஆயுள் காப்பீட்டு பிரீமியம் போன்ற பல்வேறு வழிகளில் செய்யப்படும் முதலீடுகளுக்கு ரூ .1.5 லட்சம் வரை வரி விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது.
"வரவிருக்கும் 2021 வரவுசெலவுத் திட்டத்தில் இருந்து 80 சி பிரிவில் வரம்பை ரூ .1,50,000 லிருந்து 3,00,000 ஆக உயர்த்தக்கூடும் என்று தெரிகிறது.பிரபல வருமானவரி நிபுணர் அங்கித் செஹ்ரா வும் இதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் இருப்பதாகவும்
இது அதிக முதலீட்டை அதிகரிக்கும் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வழிவகுக்கும். என்று சொல்லியிருக்கிறார்.
இந்த முறை நீண்ட கால மற்றும் குறுகிய கால சேமிப்புகளுக்கு இடையே ஒரு தெளிவான வேறுபாட்டை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும் என்று நம்புகிறேன். நீண்ட கால சேமிப்பை ஊக்குவிக்க வரிக் கொள்கையில் தற்போது பெரிய ஆதரவு இல்லை, தற்போதைய கொரோனா பரவல் காலத்தில் இது அவசியம் தேவை.ஆயுள் காப்பீடு மற்றும் ஓய்வூதிய நிதிகள் நீண்ட கால நோக்கங்களுக்காகச் சேமிப்பதற்கான முக்கிய ஆதாரமாகும். பிரிவு 80 சி தவிர, தனி தனிநபர் வருமான வரி வரம்பை உயர்த்துவது குறித்தும் அரசாங்கம் பரிசீலிக்கும் என்று இந்த முறை எதிர்பார்க்கலாம் என்றார்.