டெல்லி வன்முறையில் போராட்டக்காரர்களிடையே தனியாக சிக்கிய போலீசை விவசாயிகள் சிலர் பாதுகாத்து காப்பாற்றிய வீடியோ தற்போது சமூக தலைதளத்தில் வைரலாகி வருகிறது. மத்திய அரசின் 3 புதிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல்வேறு மாநில விவசாயிகள் தலைநகர் டெல்லி எல்லையில் 60 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, இன்று குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டனர்.
அதன்படி, இன்று மதியம் 12 மணிக்கு மேல் பேரணி நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. இருப்பினும், 12 மணிக்கு முன்பே விவசாயிகள் போலீசார் அமைத்த தடுப்புகளை மீறி டெல்லிக்குள் நுழைய முயன்றதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. மேலும் அனுமதிக்கப்பட்ட வழிகளை தவிர மற்ற வழிகளில் விவசாயிகள் செல்ல முயன்றதால் போலீசார் தடுத்ததாகவும் அதனால் தள்ளுமுள்ளுவில் தொடங்கிய வன்முறை பின்னர், தடியடி, கண்ணீர் குண்டு வீசி விவசாயிகளை போலீசார் அப்புறப்படுத்தி வருகின்றனர்.
இதனால், போலீசார் மீது கோபம் கொண்ட விவசாயிகள் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். இதன் காரணமாக, இன்று நள்ளிரவு முதல் டெல்லியில் 144 தடை அமல்படுத்தப்படுகிறது. இதற்கிடையே, இந்த கலவரத்திலும் மனித நேயத்துடன் சில விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். போலீஸ் அதிகாரி ஒருவர் போராட்டக்காரகள் மத்தியில் தனியாக சிக்கிக்கொண்டார். அவரை மீட்ட விவசாயிகள் சிலர் எதிர்ப்பாளர்கள் போலீஸ் மீது தாக்குதல் நடத்தா வண்ணம் பாதுகாத்து பத்திரமாக அனுப்பி வைத்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.