வரா கடன்களை வசூலிக்க தனி வங்கி மத்திய அரசு முடிவு

by Balaji, Jan 31, 2021, 18:45 PM IST

நாடு முழுவதும் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் நிலுவையில் இருக்கும் வழக்குகளை வசூலிக்க கடுமையான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த கடன்களை வசூலிக்க என தனியாக ஒரு வங்கியை நியமிக்கவும் அரசு ஆலோசித்து வருகிறது அனேகமாக வரும் பட்ஜெட்டில் இது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய பொதுத்துறை வங்கிகளில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷ்னல் வங்கி, பாங்க் ஆப் பரோடா ஆகிய வங்கிகளில் வாராக் கடன் அளவு மற்ற வங்கிகளை விட அதிகரித்து வருகிறது. , இவ்வங்கிகளின் நிதி நிலை மிகவும் மோசமாகி வருகிறது. இந்த 4 வங்கிகளின் மொத்த கடனில் வர்த்தகத்தில் 16 முதல் 17சதவீதம் வரையிலான கடன்கள் திரும்பி வராத நிலையில் இருக்கிறது. பொதுத்துறை வங்கிகளில் வாராக் கடன் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இப்பிரச்சனைக்கு தீர்வுக்கான தனியாக ஒரு வங்கியை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

இதற்கான அறிவிப்பை மத்திய அரசு பட்ஜெட் அறிக்கையில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், வாராக் கடனுக்குத் தனியாக வங்கியை அமைக்கும் திட்டம் அம்த்திய அரசிடம் இருந்தால், அதற்கான சொத்து மறுசீரமைப்பு விதிகள் உள்ளது என தெரிவித்திருக்கிறார். வாராக் கடனுக்காகச் தனி வங்கி அமைக்கப்பட்டால் பொதுத்துறை வங்கியில் நிலுவையில் உள்ள அனைத்து வரா கடன்களும் இந்த புதிய வங்கிக்கு மாற்றப்படும். இதன் மூலம் கடன் சுமை குறைந்து பொதுத்துறை வங்கிகளின் நிதி நிலை நல்ல நிலையை அடையும். அதுமட்டுமல்லாது அப்படிப்பட்ட பொதுத்துறை வங்கிகளின் மதிப்பும் பங்கு சந்தையில் கணிசமான அளவில் உயரும் வாய்ப்பும் இருக்கிறது. வாராக் கடனை வசூலிப்பது, கடனுக்கான தீர்வு காணும் பணிகளை புதிதாக உருவாக்கப்படும் வங்கி எடுத்துக்கொள்ளும் என்பதால் பொதுத்துறை வங்கிகள் நிம்மதி அடைந்துள்ளன.

கடன் வசூலில் நேரத்தை செலவிட வேண்டிய பொறுப்பு இல்லாததால் புதிய வணிகத்தை ஈட்டும் முயற்சியில் பொதுத்துறை வங்கிகள் இறங்கும். இதன் மூலம் ஒரு சில ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளில் நிதிநிலை மிகப் பெரிய அளவில் மேம்பாடு அடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா இதுவரை பார்க்காத பட்ஜெட் அறிக்கையைப் பார்க்கப்போகிறது என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சில தினங்களுக்கு முன்பு தெரிவித்திருக்கிறார் அது இந்த வாராக் கடனுக்கான வங்கி பற்றியதாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . இப்புதிய வங்கியின் செயல்பாடுகள் இந்திய வங்கித்துறையைப் பெரிய அளவில் மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் இதுகுறித்த நெகட்டிவ் விமர்சனங்களும் எழுந்துள்ளன. புதிய வங்கிக்கு தேவையான நிதியை மத்திய அரசு எப்படி அளிக்கப் போகிறது? மிகப்பெரிய வர்த்தக ஜாம்பவான்களாக திகழ்ந்து வரும் கார்ப்பரேட் கம்பெனிகளின் கடன்களை இந்த புதிய வங்கி எப்படி வசூலிக்கும் என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விஷயம்.

You'r reading வரா கடன்களை வசூலிக்க தனி வங்கி மத்திய அரசு முடிவு Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை