பட்ஜெட் 2021 - சாமானிய பார்வை

Advertisement

கடன் பட்ட செட்டியார் கதவு முதல் கொண்டு வித்தாராம் என்று 2021 ற்கான பட்ஜெட்டை சொல்லிவிடலாம். விற்கப்படும் நிறுவனங்கள் என Air India, LIC, IDBI Bank மற்றும் 2 பொதுதுறை வங்கிகளும், ஒரு மாநில இன்சுரன்ஸ் நிறுவனம் என லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது. இத்தனை நிறுவனங்களை விற்பதோடு அல்லாமல், நாடு முழுவதும் மின் விநியோகத்தை தனியார் மயமாக்கப் போவதாக கூறி மாநில அரசுகளின் தலையில் மண்ணை அள்ளி போட்டுள்ளார்கள்.இன்று தனியார் மின்தயாரிப்பில் அதானி ஆதிக்கம் செலுத்துவது ஊரறிந்த விடயம். அடுத்து கோவிடுக்கான செலவினங்களை சரிகட்ட மக்களிடம் வரிவிதிப்பை அதிகப்படுத்த வேண்டும். அதை நேரடியாக செய்தால் மக்கள் காரி துப்பிவிடுவார்கள் என்பதற்காக, வேளாண் வரியை ஏற்றி நடுத்தர மக்களின் வயிற்றில் அடித்துள்ளது மத்திய அரசு. ஆப்பிள், பருப்பு வகையறாக்களுக்கு கண்டபடி வரி விதிப்பை அதிகரித்துள்ளது. ஏற்கனெவே நாட்டை உலுக்கும் ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு ஊக்கம் கொடுக்கிறது இந்த பட்ஜெட்.

ஆனால் கார்ப்பரேட் வரிகளை ஏற்றாமல், அவர்களுக்கு தொழில் செய்ய ஏதுவாக களம் அமைத்து கொடுத்ததாக தம்பட்டம் அடிக்கிறது. எவ்வளவு சமூக அநீதி இது. சென்னை மெட்ரோவுக்கு 63000 கோடி ஒதுக்கியுள்ளது மத்திய அரசு. ஏறி இறங்கினால் 50 ரூபாய் என பணக்காரர்களின் பேருந்தாக பறக்கும் மெட்ரோ ரயிலுக்கு இத்தனை பெரிய நிதி ஒதுக்கீடு இந்த அரசு யாருக்கானது என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற முழக்கத்தின் அடிப்படையில் புலம்பெயர் தொழிலாளிகளுக்கு அவர்கள் பணிபுரியும் மாநிலங்களிலேயே ரேஷன் கிடைக்க வழி செய்வது பாராட்டுதலுக்குரியது. ஆனால் வடமாநில தொழிலாளிகள் அதிகம் வேலை செய்யும் தென் மாநிலங்களுக்கு தான் அந்த சுமை அதிகரிக்க போகிறது. அதற்கு Comphensation பற்றி வாய் திறக்கவில்லை நிர்மலா அம்மா. நடுத்தர மக்களின் வாழ்வை பாதிக்கும் காரணிகள் என பார்த்தால் அரிசி, காய்கறிகளுக்கு வரி ஏற்றாது விவசாயத்தை ஏறி நேரடியாக மிதிக்காது.

Imported பழங்கள், பருப்பு வகைகளுக்கு வரிவிதிப்பை செய்துள்ளார்கள். இது ஜீஸ்களின் விலையையும் ( நாம் ஜீஸ் கடைகளில் உட்கொள்வது 90 சதவிகிதம் Imported fruits ) , தினசரி மளிகை பொருட்கள் விலைவாசியையும் ஏற்றுகிறது. மொபைல் உதிரி பாகங்கள், துணிகளின் மூலப்பொருளான பருத்தி, ரேயான், போன்றவற்றின் விலைவாசி உயர்வு நடுத்தர மக்களை வருங்காலங்களில் வாட்ட போகிறது. கல்வி உதவித்தொகையான Post Metric Scholarship Scheme ல் ஏற்கனெவே 5000 கோடி சென்ற ஆண்டு தட்டுப்பாட்டில் இருக்க அடுத்த 5 to 6ஆண்டுகளுக்கு 35000 கோடி ஒதுக்கி இருப்பது கண்துடைப்பு. இது சாமானிய SC ST OBC மாணவர்களை வெகுவாக பாதிக்க போகிறது என்பது தான் உண்மை. மொத்தத்தில் மத்திய அரசு ஒரு OLX நிறுவனத்தின் பிரதி போல கையில் கிடைத்ததை விற்று காலம் தள்ளுகிறது. GDP, Fiscal Deficit, Gold And Silver Rate, Inflation போன்ற எல்லா Estimate களுமே Setting தான்...அவை அதீத கற்பனைகள்

Advertisement
மேலும் செய்திகள்
guarantee-signature-required-mudra-loan-increase-to-20-lakhs-who-will-get-it
கியாரண்டி கையெழுத்தே தேவையில்... முத்ரா லோன்... 20 லட்சமாக உயர்வு... யார் யாருக்கு கிடைக்கும்?
a-trainee-ias-officer-a-thousand-lies-fortunately-people-escaped
ஒரு பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியும்... ஆயிரம் பொய்களும்... நல்ல வேளை மக்கள் தப்பிச்சாங்க!
students-who-did-not-wear-double-braids-teachers-who-took-scissors-in-hand-officials-who-suspended-them-in-action
இரட்டை ஜடை போடாத மாணவிகள்... கத்தரியை கையில் எடுத்த ஆசிரியர்கள்... அதிரடியாக சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள்
bir-mohammed-caught-in-pocso-panchayat-held-in-jamaat
போக்சோவில் சிக்கிய பீர் முகமது... ஜமாத்தில் நடந்த கட்டி வைத்து நடந்த பஞ்சாயத்து
gitari-film-actress-who-entered-wayanad-landslide
வயநாடு நிலச்சரிவு... பரபரவென களத்தில் இறங்கிய கிடாரி பட நடிகை... நீளும் உதவிக்கரங்கள்...
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி

READ MORE ABOUT :

/body>