750 புதிய ஏகலைவா பள்ளிகள்.. 100 புதிய சைனிக் பள்ளிகள்... பட்ஜெட்டில் அறிவிப்பு!

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு இன்று நாடாளுமன்றத்தில் 8-வது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தது. 2021 - 2022 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய முயற்சியில் டிஜிட்டல் முறையில், நாடாளுமன்றத்தில் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்தார். தொடர்ந்து, பட்ஜெட் தாக்கல் உரையை 1 மணி நேரம் 50 நிமிடங்களில் நிர்மலா சீதாராமன் முடித்தார்.

பட்ஜெட்டில் கல்வி சார்ந்த அறிவிப்பு பின்வருமாறு:


கல்வித்துறை:

* 100 புதிய சைனிக் பள்ளிகள் உருவாக்கப்படும்.
* காஷ்மீரின் லே பகுதியில் புதிய மத்திய பல்கலைக் கழகம் தொடங்கப்படவுள்ளது.
* மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் 750 புதிய ஏகலைவா பள்ளிகள் தொடங்கப்படும்.

* ஆதிதிராவிட மாணவ - மாணவியருக்கு உதவும் வகையில் அடுத்த 6 ஆண்டுகளில் 35,219 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
* ஆதிதிராவிட மாணவர்களுக்கு 10-ம் வகுப்பு பிந்தைய கல்விக்கான திருத்தியமைக்கப்பட்ட கல்வி உதவித் தொகை திட்டம் அறிமுகம்.
* அடுத்த ஐந்தாண்டுகளில் தேசிய ஆராய்ச்சி மையத்திற்கு 50,000 கோடி ஒதுக்கீடு.

விண்வெளித்துறை:

* இந்திய விண்வெளித்துறையின் கீழ் புதிய பொதுத்துறை நிறுவனமாக நியூ ஸ்பேஸ் இந்தியா தொடங்கப்படும்.
* நியூ ஸ்பேஸ் இந்தியா மூலம் பிஎஸ்எல்வி சிஎஸ்51 செலுத்து வாகனம் உருவாக்கப்படவுள்ளது.
* 2021-ம் ஆண்டு டிசம்பரில் ஆளில்லா விண்வெளி ஓடம் ககன்யான் செலுத்தப்படவுள்ளது.

பிற அறிவிப்புகள்:

* நாட்டின் உள்நாட்டு மொழிகளுக்கு ஊக்கிமளிக்கும் வகையில் தேசிய மொழிபெயர்ப்பு இயக்கம் தொடங்கப்படும்.
* கணினி துறையில் புதிய முன்னேற்றங்களான டேட்டா அனலிட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, இயந்திரவழி கற்றல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :