பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றம் என மாநில அரசுகள் இயற்றிய சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்ய மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றம் என பஞ்சாப், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் சட்டங்கள் இயற்றியுள்ளன. சில மாநிலங்கள் பிச்சை எடுப்பதற்கு சிறை தண்டனையும், அபராதங்களும் விதித்துள்ளன. குறிப்பாக பேருந்துகள், ரயில்நிலையங்கள் போன்ற இடங்களில் மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் விதமாக பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பிச்சை எடுப்பது எடுப்பது அவர்களின் விருப்பத்தின்பேரில் செய்யவில்லை. அவர்கள் மோசமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதால் இதை செய்கிறார்கள். எனவே இதை கிரிமினல் குற்றமாக கருதுவது அவர்களுக்கு மேலும் அழுத்தம் தரக்கூடிய விஷயமாக மாறிவிடும் எனக்கூறி பல்வேறு பொதுநல மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த வழக்குகள் அனைத்தும் விசாரிக்கப்படும் எனவும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் அனைத்தும் இதுகுறித்து பதிலளிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முன்னதாக,பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றம்
ஆகாது என கடந்த 2018-ம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.