ராமர் கோயில் நிதிக்கு வரிவிலக்கு.. பாபர்மசூதி நிதிக்கு ஏன் இல்லை? ரவிக்குமார் எம்.பி. கேள்வி.

Advertisement

அயோத்தி ராமர் கோயில் நன்கொடைக்கு வருமான வரி விலக்கு அளித்தது போல், பாபர் மசூதி நன்கொடைக்கு விலக்கு அளிக்காதது ஏன்? என்று விடுதலை சிறுத்தைகள் எம்.பி. ரவிக்குமார், நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் நீண்ட காலமாகச் சர்ச்சையில் இருந்த 2.77 ஏக்கர் இடத்தை ராமர் கோயில் கட்டுவதற்கு ஒப்படைக்குமாறு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. பாபர் மசூதி கட்டுவதற்கு வேறு இடம் ஒதுக்கவும் உத்தரவிட்டது.

இதையடுத்து, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் அயோத்தியில் ராமர் கோயிலுக்கான பூமி பூஜை நடத்தப்பட்டது. பிரதமர் மோடி கலந்து கொண்டு பூஜை நடத்தினார். இந்த கோயில் கட்டுவதற்கு வழங்கப்படும் நன்கொடைக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி. ரவிக்குமார், நாடாளுமன்றத்தில் ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்துள்ளார்.

அதில் அவர், “ராமர் கோயில் கட்டும் அமைப்புக்கு வருமானவரி சட்டப்பிரிவு 80G ன் கீழ் மத்திய அரசு வரி விலக்கு அளித்துள்ளது. அதே அயோத்தியில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பாபர் மசூதி கட்டுவதில் ஈடுபட்டுள்ள இந்தோ இஸ்லாமிக் கல்ச்சுரல் பவுண்டேஷனுக்கு இன்னும் வருமான வரி விலக்கு அளிக்கவில்லை. இவ்வாறு பாகுபாடு காட்டுவதற்கான காரணங்களைக் கூறுங்கள்” என்று கேட்டிருக்கிறார்.

Advertisement
மேலும் செய்திகள்
guarantee-signature-required-mudra-loan-increase-to-20-lakhs-who-will-get-it
கியாரண்டி கையெழுத்தே தேவையில்... முத்ரா லோன்... 20 லட்சமாக உயர்வு... யார் யாருக்கு கிடைக்கும்?
a-trainee-ias-officer-a-thousand-lies-fortunately-people-escaped
ஒரு பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியும்... ஆயிரம் பொய்களும்... நல்ல வேளை மக்கள் தப்பிச்சாங்க!
students-who-did-not-wear-double-braids-teachers-who-took-scissors-in-hand-officials-who-suspended-them-in-action
இரட்டை ஜடை போடாத மாணவிகள்... கத்தரியை கையில் எடுத்த ஆசிரியர்கள்... அதிரடியாக சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள்
bir-mohammed-caught-in-pocso-panchayat-held-in-jamaat
போக்சோவில் சிக்கிய பீர் முகமது... ஜமாத்தில் நடந்த கட்டி வைத்து நடந்த பஞ்சாயத்து
gitari-film-actress-who-entered-wayanad-landslide
வயநாடு நிலச்சரிவு... பரபரவென களத்தில் இறங்கிய கிடாரி பட நடிகை... நீளும் உதவிக்கரங்கள்...
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
/body>