ஒரே ஆண்டில் 7ஆயிரம் இந்தியப் பணக்காரர்கள் இந்தியாவைவிட்டு வெளியேறியுள்ளனர் என்ற புள்ளிவிவரம் மத்தியில் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய நேரடி வரி ஆணையம் சமீபத்தில் இந்த அதிர்ச்சி புள்ளிவிவரத்தைக் கேட்டு அதிர்ச்சி அடைந்து, இப்பிரச்னையைத் தீர்க்க ஒரு கமிட்டியே அமைத்துள்ளது. மேலும் இந்தப் புள்ளிவிவரம், கடந்த 2014-ம் ஆண்டிலிருந்து 23,000 இந்தியர்கள் இந்தியக்குடியுரிமை வேண்டாமென்று நாட்டைவிட்டு வெளியேறி உள்ளனர்.
குறிப்பாக கடந்த 2017-ம் ஆண்டில் மட்டும் 7,000 பேர் இந்தியக் குடியுரிமையைத் துறந்து வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். இவர்கள் அத்தனை பேரும் இந்தியாவின் தொழிலதிபர்களும் முன்னணிப் பணக்காரர்களும் ஆவர்.
இந்த சூழல் இந்தியாவின் சமூக நலனை மட்டுமல்லாது நாட்டின் பொருளாதார நிலையையும் சீர்குழைக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால், நாட்டின் பொருளாதாரம், வரி விகிதாரச்சாரங்கள் அனைத்தையும் மேம்படுத்த மத்திய வரி ஆணையக் குழு தற்போது ஆலோசித்து வருகிறது.