நீதிபதி லோயா மரணம் குறித்த சுதந்திரமான விசாரணை குழு அமைக்க உத்தரவிடும்படி கேட்டுக் கொண்ட மனு நிராகரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி எதிர்கட்சி எம்.பிக்கள் மனு அளித்துள்ளனர்.
மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக பிரிஜ்கோபால் ஹரிகிருஷ்ணன் லோயா (48) இருந்தார். இவர், கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1ம் தேதி நாக்பூரில் சக நீதிபதியின் இல்ல திருமண விழாவில் கலந்துக் கொல்வதற்காக சென்றிருந்தார். ஆனால், அங்கு லோயா திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார்.
ஆனால், நீதிபதி லோயா மரணம் இயற்கையானது அல்ல என்று குற்றம்சாட்டி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி லோயாவின் மரணத்தில் மர்மம நீடிப்பதாகவும், இதனால் இந்த வழக்கில் சுதந்திரமான சிறப்பு குழுவினரின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் காங்கிரஸ் பிரமுகர் தெசீன் பூனவாலா, பத்திரிகையாளர் பி.ஆர்.லோன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.
ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிபதி லோயா மரணம் தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்த கூடாது என மகாராஷ்டிரா மாநில அரசு பதில் மனு தாக்கல் செய்தது.
இந்நிலையில், இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முன்னிலையில் வந்தது.
அப்போது, இந்த மனுக்கள் விசாரணைக்கு உகந்தது அல்ல. லோயாவுடன் பொறுப்பில் இருந்த நீதிபதிகள் அறித்த அறிக்கைகள் மீது எந்த சந்தேகளும் இல்லை. ஆனால், மனுதாரர்களின் முயற்சியானது நீதித்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் செயல். சுதந்திரமான விசாரணை கேட்பது நீதித்துறை மீதான தாக்குதல். என தெரிவித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநிலங்களவையில் உள்ள ஏழு எதிர்கட்சிகளை சேர்ந்த 64 எம்பிக்கள் குலாம் நபி ஆசாத் தலை¬யில் இன்று டெல்லியில் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடுவை சந்த்தினர். அப்போது, “நீதிபதி லோயா மரணம் தொடர்பாக சுதந்திரமான விசாரணை குழு அமைக்க மறுத்துவிட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என வலியுறுத்தி மனு அளித்தனர்.