பாஜக என்ற புற்றுநோயால் மரணம் நிச்சம் - பிரகாஷ்ராஜ் அதிரடி பேச்சு

பாஜக என்பது புற்றுநோய் புற்றுக் நோய்க்கு சிகிச்சை இல்லை. மரணம் ஏற்படும் என்பதை மக்கள் உணர வேண்டும் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.

by Lenin, Apr 22, 2018, 18:54 PM IST

பாஜக என்பது புற்றுநோய்; புற்றுக் நோய்க்கு சிகிச்சை இல்லை. மரணம் ஏற்படும் என்பதை மக்கள் உணர வேண்டும் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.

கர்நாடகத்தில், மே 12-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு பல்வேறு கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. நடிகர் பிரகாஷ் ராஜூம் ஏற்கெனவே அறிவித்தபடி பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில், அவர் வெள்ளிக்கிழமையன்று செய்தியாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது, "அரசின் தவறுகளுக்கு எதிராகவும், அநீதியை தட்டிக்கேட்கவும் மக்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று கூறியதுடன், கர்நாடகா மக்கள் அனைவரும் பாஜக-வைப் புறக்கணிக்க வேண்டும்.

தான் மதங்களுக்கு எதிரானவன் அல்ல. ஒருவர் மீது மதத்தை திணிப்பதை மட்டுமே எதிர்க்கிறேன். தான் எந்த கட்சிக்கும் ஆதரவானவன் அல்ல. நாட்டு நலனுக்காக சில கேள்விகளை மட்டுமே கேட்கத் தொடங்கி இருக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை பாஜக என்பது புற்றுநோய்; ஆனால் காங்கிரஸ் மதச்சார்பற்ற ஜனதாதளம் போன்ற கட்சிகள் சளித்தொல்லை போன்றவைதான். சளிக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியும். ஆனால் புற்றுக் நோய்க்கு சிகிச்சை இல்லை. மரணம் ஏற்படும் என்பதை மக்கள் உணர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading பாஜக என்ற புற்றுநோயால் மரணம் நிச்சம் - பிரகாஷ்ராஜ் அதிரடி பேச்சு Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை