நாடு முழுவதும் உச்சத்தில் கொரோனா – 2வது டோஸை செலுத்திக்கொண்ட பிரதமர் மோடி!
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பானது புதிய உச்சத்தை எட்டியுள்ளது. நாள்தோறும் கொரோனா பாதிப்புகளின் உயர்வு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை, முதல் அலையைப்போல இல்லாமல் மிக வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனாவின் முதல் அலை கட்டுப்படுத்தப்பட்டது. ஒரு நாள் பாதிப்பு அதிகபட்சம் 1 லட்சத்துக்குள் இருந்தது. அது 10 ஆயிரத்துக்கு கீழே கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால்,இப்போது தினசரி பாதிப்பு 1 லட்சத்தை கடந்து விட்டது. அதுவும் 3 நாளில் 2 முறை 1 லட்சத்தை கடந்துள்ளது. அந்த வகையில் நேற்று 1.15 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது. இதனிடையே பிரதமர் மோடி இரண்டாவது டோஸ் தடுப்பூசியை இன்று செலுத்திக்கொண்டார்.
கடந்த மார்ச் 1ந்தேதி கோவாக்சின் தடுப்பூசி எடுத்துக்கொண்ட பிரதமர் மோடி, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 2-வது டோஸ் கொரோனா தடுப்பூசியை இன்று செலுத்திக்கொண்டார். 2-வது டோஸ் கொரோனா
தகுதி பெற்ற அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.
தடுப்பூசியை செலுத்திக்கொள்வது கொரோனா வைரசை எதிர்கொள்வதற்கான வழிகளில் ஒன்று என பிரதமர் மோடி கூறினார்
இதனிடையே கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டுவருவது தொடர்பாக இன்று அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது, கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கட்டுபாடுகளை அதிகரிக்க இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என தெரிகிறது. முன்னதாக கடந்த 6-ம் தேதியன்று 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.நேற்று தமிழக தலைமை செயலாளர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.