உத்தரக்காண்டில் ஐ.ஐ.டி. ரூர்கீ யில் 90 மாணவ-மாணவியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இந்தியாவில் அண்மை காலமாக கொரோனா பாதிப்பகள் உச்சமடைந்து வருகின்றன. இதனால் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
இந்தியா முழுவதிலும் இருந்து ஐ.ஐ.டி.க்கு திரும்பும் அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதன் பின்னர் 15 நாட்கள் மாணவர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றன.
இந்நிலையில், உத்தரகாண்டில் உள்ள ஐஐடி ரூர்கீயில் கடந்த சில நாட்களாக மாணவர்களிடையே கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. கொரோனா பரிசோதனை முடிவில் மொத்தம் 90 பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. அவர்களை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஐ.ஐ.டி. ரூர்கீயில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு விடுதிகளில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். 5 விடுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது. ஒரு விடுதி கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு உள்ளது. ஐஐடி வாளாகத்தை சுற்றி கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஐ.ஐ.டி. வளாகத்திற்குள் வருவதற்கும், வெளியே செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. வளாகத்திற்குள் வசிக்கும் அனைவருக்கும் முன்னெச்சரிக்கை வழிகாட்டி நெறிமுறைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
கொரோனா பாதித்த 90 மாணவ-மாணவிகள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் மற்றும் உணவுகள் வழங்கப்படுகின்றன. தொடர்ந்து மாணவர்களின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து கொரோனா பாதித்த மாணவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.