அவர் க்ளீன்போல்டு ஆகிவிட்டார் – மம்தாவை சீண்டும் மோடி!

by Madhavan, Apr 12, 2021, 21:06 PM IST

வங்காள மக்கள் அதிக பவுண்டரிகள் மற்றும் சிக்சர்கள் அடித்துவிட்டனர். இதனால் நடந்து முடிந்த 4 கட்ட தேர்தல்களிலும் பாஜக செஞ்சூரி அடித்துள்ளது என்று பிரசார கூட்டத்தில் பேசியுள்ளார் பிரதமர் மோடி.

மேற்குவங்காளத்தைச்சுற்றிதான் இந்தியாவின் கண்கள் இருக்கின்றன. 8 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸூம் பாஜகவும் எதிரெதிர் துருவங்களாக கடுமையாக முட்டி மோதி வருகின்றனர். முதல் மூன்று கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் அடுத்தடுத்த கட்டங்களுக்கான தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில்,மேற்கு வங்காள மாநிலம் பர்தமானில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், ``நந்திகிராமில் மம்தா பானர்ஜி கிளீன் போல்டாகிவிட்டார். மம்தாவின் ஒட்டுமொத்த குழுவினரும் களத்தை விட்டு வெளியேறும்படி மக்கள் கூறிவிட்டனர். வங்காள மக்கள் அதிக பவுண்டரிகள் மற்றும் சிக்சர்கள் அடித்துவிட்டனர்.

இதனால் நடந்து முடிந்த 4 கட்ட தேர்தல்களிலும் பாஜக செஞ்சூரி அடித்துள்ளது. நந்திகிராமில் மம்தா பானர்ஜி கிளீன் போல்டாகிவிட்டார். மம்தாவின் ஒட்டுமொத்த குழுவினரும் களத்தை விட்டு வெளியேறும்படி மக்கள் கூறிவிட்டனர். வங்காள மக்கள் அதிக பவுண்டரிகள் மற்றும் சிக்சர்கள் அடித்துவிட்டனர். இதனால் நடந்து முடிந்த 4 கட்ட தேர்தல்களிலும் பாஜக செஞ்சூரி அடித்துள்ளதுஎன்று பேசியுள்ளார்.

இதனிடையே மம்தா பானர்ஜி ஒருநாள் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. காரணம், முஸ்லீம் வாக்குகள் தொடர்பாக மம்தா பேசியிருந்தார். இவரின் பேச்சு தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் அளித்திருந்தது. இந்த புகாரின் அடிப்படையில் தற்போது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, மம்தா பானர்ஜி ஒருநாள் தேர்தல் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்து அதிரடி காட்டியுள்ளது. .

You'r reading அவர் க்ளீன்போல்டு ஆகிவிட்டார் – மம்தாவை சீண்டும் மோடி! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை