1,001 கோடி ரூபாய்க்கு சொகுசு பங்களா.. அசரவைக்கும் இந்திய பணக்காரர்!

by Sasitharan, Apr 13, 2021, 19:29 PM IST

இந்திய சில்லறை வர்த்தக நிறுவனமான டிமார்ட்டின் நிறுவனர் 66 வயதான ராதாகிஷன் தமானி. இவர் மும்பையின் டோனி மலபார் மலையில் தமனி ஒரு புதிய 5752,22 சதுர மீட்டர் பங்களா ஒன்றை 1,001 கோடி ரூபாய்க்கு வாங்கி ஆச்சர்யப்பட வைத்துள்ளார். ராதாகிஷன் தமானி தனது சகோதரருடன் இணைந்து சொகுசு பங்களாவை வாங்கியிருக்கிறார்.

தெற்கு மும்பையில் உள்ள மலபார் ஹில் பகுதியின் மதுகுஞ்ச் எனும் இடத்தில் 2 தளங்களைக் கொண்டது இந்த சொகுசு பங்களா. மொத்தம் 61,916 சதுர அடி கொண்ட இந்த பங்களாவின் சந்தை மதிப்பு ரூ.724 கோடி எனக் கூறப்படுகிறது. இந்த பங்களாவை வாங்குவதற்காக முத்திரைத் தாள் கட்டணமாக ரூ.30.03 கோடியை ராதாகிஷன் தமானி செலுத்தி இருக்கிறார். மேலும் இதன் ஒப்பந்தம் 113 கோடி ரூபாய் மதிப்புடையதாகும் எனக் கூறப்படுகிறது. சமீபகாலமாக நடந்து வரும் ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில் இது மிகப்பெரிய தொகை என்பது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த ராதாகிஷன் தமானி?!

மும்பையை தலைமையிடமாக கொண்ட டிமார்ட் நிறுவனம் இந்தியாவில் பல்வேறு பகுதியில் சில்லரை வர்த்தக நிறுவனமாக அவென்யு சூப்பர்மார்ட் என்ற பெயரில் சூப்பர் மார்கெட்களை நிறுவியிருக்கிறது. இதன் நிறுவனர் தான் ராதாகிஷன் தமானி. இந்தியாவில் வாழும் பணக்காரர்களின் பட்டியலில் தற்போது 8வது இடத்தில் இருக்கிறார் ராதாகிஷன் தமானி என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading 1,001 கோடி ரூபாய்க்கு சொகுசு பங்களா.. அசரவைக்கும் இந்திய பணக்காரர்! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை