இந்தியாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா 2.0

by Ari, Apr 15, 2021, 16:33 PM IST

இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரே நாளில் ஒரு லட்சத்து 84 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலைதான், முதல் அலையைக் காட்டிலும் மிகுந்த வீரியத்துடன் தாக்கி வருகிறது. இதுவரை இல்லாத வகையில்1 லட்சத்து 84 ஆயிரத்து 372 பேரை கொரோனா புதிதாக தாக்கி புதிய உச்சம் தொட்டது. இதனால் மொத்த பாதிப்பு 1 கோடியே 38 லட்சத்து 73 ஆயிரத்து 825 ஆக எகிறி உள்ளது. உலக அளவில் நோயாளிகள் எண்ணிக்கை அடிப்படையில் கொரோனாவின் மோசமான தாக்குதலுக்கு ஆளான நாடுகளின் பட்டியலில், அமெரிக்காவைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இந்தியா நீடிக்கிறது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் உலகளவில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.

நேற்று முன்தினம் நாடு முழுவதும் 14 லட்சத்து 11 ஆயிரத்து 758 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில்தான் கொரோனா புதிதாக 1.84 லட்சத்துக்கும் அதிகமானோரை தாக்கி அதிர வைத்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் பிடியில் இருந்து மீட்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 23 லட்சத்து 36 ஆயிரத்து 36 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா மீட்புவிகிதம் 88.92 சதவீதமாக இருக்கிறது. மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், சத்தீஷ்கார், கர்நாடகம், கேரளா உள்ளிட்ட 10 மாநிலங்களில் நாள்தோறும் தொற்று பாதிப்புக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


இதற்கிடையே 3 நாள் தடுப்பூசி திருவிழா மூலம், இந்தியாவில் 11 கோடியே 11 லட்சத்து 79 ஆயிரத்துக்கும் அதிகமான டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இந்த நிலையில், இந்தியாவில் தடுப்பூசி திட்டத்தை மேலும் விரைவுபடுத்த ஏதுவாக பைசர், ஜான்சன் அன்ட் ஜான்சன் ஆகிய வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தடுப்பூசி வினியோகத்தை தொடங்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

You'r reading இந்தியாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா 2.0 Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை