கேரளாவில் இன்றும், நாளையும் 2.5 லட்சம் கொரோனா பரிசோதனைகள் இலக்கு

by Ari, Apr 16, 2021, 06:09 AM IST

கேரளாவில் இன்றும், நாளையும் 2.5 லட்சம் கொரோனா பரிசோதனைகள் செய்வதற்கு கேரளா அரசு முடிவு செய்துள்ளது.

கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனா பாதிப்பு. கேரளாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,97,301 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,856 ஆக அதிகரித்துள்ளது. தற்பொழுது 63,650 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதனிடையே, பிரிட்டனில் இருந்து கேரளா திரும்பிய 111 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 11 பேர் உருமாறிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், கொரோனா பரிசோதனைகள் அதிகளவில் நடத்தப்படுகிறது.

இதனிடையே, கேரளாவில் உள்ளரங்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு 100 பேருக்கு அளிக்கப்பட்டு வந்த அனுமதி இனி 75 ஆகவும், திறந்தவெளியில் நடக்கிற நிகழ்ச்சிகளில் 200 பேர் கலந்து கொள்ள வழங்கப்பட்ட அனுமதி இனி 150 ஆகவும் குறைத்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்றும், நாளையும் 2.5 லட்சம் கொரோனா மாதிரிகளை பரிசோதிக்க கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து கூறிய அவர், கொரோனா மாதிரிகள் பரிசோதனைக்கு தேவையான விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும், பரிசோதனை இலக்குகளை முழுமையாக அடைந்து காட்டுமாறு மாவட்ட ஆட்சியர்களக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தேர்தல் பணிகளில் முக்கிய பங்கு எடுத்தவர்கள், கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

You'r reading கேரளாவில் இன்றும், நாளையும் 2.5 லட்சம் கொரோனா பரிசோதனைகள் இலக்கு Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை