தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையை தள்ளிவைக்கும் திட்டம் இல்லை என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். மே 2ம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையை தள்ளி வைப்பது தொடர்பாக எந்த ஆலோசனையும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
வாக்கு எண்ணும் மையத்தில் செய்துள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தருவோம் என்றும் ஞாயிறு ஊரடங்கு, கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தலைமை செயலாளருடன் ஆலோசிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, கொரோனா 2-வது ஆலை பரவ தேர்தல் ஆணையம் தான் காரணம்.
உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாவிட்டால் வாக்கு எண்ணிக்கை நிறுத்த நேரிடும் என்று சென்னை உயர்நீதிமன்றம் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையை தள்ளிவைக்கும் திட்டம் இல்லை என்றும் திட்டமிட்டபடி மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் கூறியுள்ளார்.