தேசிய அளவில் தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்துவது, ஆக்சிஜன் சப்ளையை சீரமைப்பது போன்ற பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. பிரதமர் மோடி இன்று மீண்டும் தீவிர ஆலோசனை- மேலும் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்த வாய்ப்பு. இந்தியாவில் கொரோனா 2-வது அலை நாளுக்கு நாள் வேகமாக பரவிய படி உள்ளது. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகளே தீவிரமாக போராடி வருகின்றன.
கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் புதிய விதிமுறைகளை மாநில அரசுகள் அறிவித்து கொள்ள ஏற்கனவே மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு மாநிலமும் தங்கள் பகுதி சூழ்நிலைக்கு ஏற்ப கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றன. தினசரி ஆக்சிஜன் உற்பத்தியை 8,922 மெட்ரிக் டன் அளவுக்கு அதிகரித்து இருப்பது பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த அடுத்தக் கட்டமாக என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என்பது பற்றி முடிவு செய்ய மோடி திட்டமிட்டார்.
பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா நோயாளிகளை அனுமதிக்க படுக்கைகள் இல்லாத நிலை உள்ளது. அதுபோல ஆக்சிஜன் தட்டுப்பாடு, தடுப்பூசி தட்டுப்பாடு போன்றவையும் நீடித்தபடி உள்ளன.இதுபற்றி பிரதமர் மோடி மத்திய மந்திரிகளிடமும், அதிகாரிகளிடமும் கருத்துக்களை கேட்டறிந்தார். பிரதமர் மோடி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. எனவே இன்று பிற்பகல் அல்லது நாளை மத்திய அரசு புதிய அறிவிப்புகளை வெளியிட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. குறிப்பாக மேலும் சில புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.