கணவர் பாஸ்போர்ட் மூலம் நாடு கடந்த பயணம்: சிக்கலில் இந்திய வம்சாவளிப் பெண்

Advertisement

இந்திய வம்சாவளிப் பெண் ஒருவர் தன் கணவர் பாஸ்போர்ட் மூலம் இந்திய வந்தடைந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் கீதா. இவர் லண்டனில் உள்ள மான்செஸ்டர் நகரில் மிகப்பெரும் ஜவுளிக்கடை வைத்துள்ளார். சொந்த காரணத்துக்காக இந்தியாவுக்கு வர லண்டன் மான்செஸ்டர் விமான நிலையம் வந்தடைந்தார் கீதா.

அங்கிருந்து துபாய் சென்று, அங்கிருந்து ’எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்’ மூலம் இந்தியா வந்தடைந்தார். இரண்டு விமான நிலையங்களைக் கடந்து வந்து இந்திய விமான நிலையத்தில் பாஸ்போர்ட் சோதனையின் போது சிக்கிக்கொண்டுள்ளார் கீதா.

அப்போதுதான், தான் லண்டனிலிருந்து இந்தியா வரும்வரையில் கணவரின் பாஸ்போர்ட்டை தவறுதலாக எடுத்து வந்துருப்பதை அறிகிறார் கீதா. டெல்லி விமான நிலையத்தில் இருந்து இந்தியாக்குள் நுழைய கீதாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

‘லண்டன் விமான நிலையத்திலேயே விமான நிலைய ஊழியர்கள் சரிவர சோதனை செய்திருந்தால் இந்த சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்க மாச்சேன். தற்போது தவறுதலாக என் பாஸ்போர்ட் எடுத்துவருவதற்கு பதிலாக கணவர் பாஸ்போர்ட்டை எடுத்துவந்து சிக்கலில் ஊள்ளேன்’ என்று வேதனையுடன் விமான நிலைய அதிகாரிகளிடம் புலம்பி தள்ளியுள்ளார் கீதா.

 - thesubeditor.com

Advertisement
/body>