நாடெங்கிலும் உள்ள 13 மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.
மழைக்காலம் நெருங்கி வருவதையடுத்து நாடு முழுவதும் உள்ள 13 மாநிலங்களுக்கும் 2 யூனியன் பிரதேசங்களுக்கும் மழை மற்றும் இடி எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அவசர எச்சரிக்கைச் செய்தியைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகமும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த வாரம் உத்தரப்பிரதேசத்தை புழுதிப்புயல் சுழற்றி அடித்ததைத் தொடர்ந்து மீண்டும் உத்தரபிரதேசத்துக்கு மழை மற்றும் கடுமையான இடி, மின்னல் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தலைநகர் டெல்லி, பீகார், மேற்கு வங்களாம், சிக்கிம், ஒடிசா, அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கு கடும் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று மேற்கு உத்தரப்பிரதேசம் மற்றும் டில்லி பகுதிகளில் இரண்டு மணி நேரத்துக்கு இடைவிடாத மழை பெய்யும் என எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.