கர்நாடக முதல்வர் சித்தராமையா, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வழக்கம் போல ட்விட்டரில் கலாய்த்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் இந்த மாதம் 12-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு பல்வேறு கட்சிகளுக்கு இடையில் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக களத்தில் நேரடி போட்டியில் இருக்கும் தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக மத்தியில் எல்லா தளங்களிலும் போட்டா போட்டி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று கர்நாடகாவில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த பிரதமர் மோடி, `அகில இந்தி காங்கிரஸ், கர்நாடக தேர்தலுக்குப் பின்னர் `PPP’ காங்கிரஸாக மாறும். முதல் P- புதுச்சேரியைக் குறிக்கும், இரண்டாவது P-பஞ்சாப்பை குறிக்கும், மூன்றாவது P-பரிவார் (குடும்பத்தைக் குறிக்கும்).
ஏனென்றால், மேற்குறிப்பிட்ட இரண்டு மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்’ என்று கிண்டல் செய்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சித்தராமையா, `உங்களின், `பிபிபி’ விளக்கம் பற்றி அறிந்தேன். உங்கள் பார்ட்டிக்கான மூன்று P என்னத் தெரியுமா?
முதல் P- ப்ரிசன் எனப்படும் சிறைச்சாலையைக் குறிக்கும், இரண்டாவது P- ப்ரைஸ் ரைஸ் எனும் விலை உயர்வைக் குறிக்கும். மூன்றாவது P பக்கோடா கட்சி என்பதைக் குறிக்கும்’ என்று தெரிவித்துள்ளார். சமீப காலமாக சித்தராமையா, மோடியை குறி வைத்து கலாய்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.