கர்நாடக சட்டமன்ற தேர்தல் மே 12-ஆம் தேதி நடைபெறுகிறது. அனைத்துக் கட்சி தலைவர்களும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடகா தேர்தல் காரணமாக காங்கிரஸ் கட்சியின் சார்பாக சோனியா காந்தி இன்று பிரச்சாரம் செய்துள்ளார். அப்போது, பேசிய அவர் நரேந்திர மோடி நல்ல ஒரு நடிகர், அவர் மக்களை பொய் சொல்லி ஏமாற்றிவிட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு பின் தேர்தலில் பிரச்சாரம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடகாவில் பிஜப்பூர் தொகுதியில் சோனியாகாந்தி காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
அப்பிரச்சாரத்தில், “நரேந்திர மோடி அரசு கர்நாடக விவசாயிகளை ஏமாற்றியாது. நாடு முழுக்க அதிக நிதி ஒதுக்கப்பட்டாலும் கர்நாடகாவிற்கு எதுவும் கிடைக்கவில்லை எனவும், இந்தியாவிலேயே கர்நாடகா விவசாயிகளுக்குதான் மிகவும் குறைவான கடன் தள்ளுபடி பெற்றுள்ளனர். இதுவரை இல்லாத வகையில் விலைவாசி அதிக அளவில் உயர்ந்துள்ளது.
நரேந்திர மோடி நன்றாக நடிக்கிறார், அவர் மிகவும் சிறந்த நடிகர். அவர் நல்ல பேச்சாளர் என்பது உண்மையில் எனக்கு பெருமை, நான் இதை ஏற்றுக்கொள்கிறேன். அவர் நடிகர் போல் பேசுகிறார். இந்த பேச்சு மூலம் நாட்டின் பசியை போக முடியும் என்றால் நான் மகிழ்ச்சி அடைவேன். ஆனால் பேச்சு வெறும் வயிறை நிறப்ப முடியாது. அதற்கு உணவு தேவைப்படும்”என்றார்.
நரேந்திர மோடி வெளிநாடு சென்று பொய் சொல்கிறார், வரலாற்றை திரிக்கிறார். காங்கிரஸ் தலைவர்களின் பெயரை பயன்படுத்தி விளம்பரம் தேடுகிறார். 'ஊழலுக்கு எதிராக நரேந்திர மோடி எதுவும் செய்யவில்லை. ஊழல் குற்றச்சாட்டு உள்ளவர்களுக்கு நரேந்திர மோடி தேர்தலில் வாய்ப்பளித்துள்ளார். இதை மக்கள் முடிவிற்கு கொண்டு வர வேண்டும். கர்நாடக தேர்தலில் மக்கள் பாஜகவிற்கு பாடம் புகட்ட வேண்டும்'' என கூறினார்.