ரயில் பயணத்தின்போது பயணிகள் இறந்துவிட்டால் அவர்களது குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரயில் பயணத்தின்போது இறக்கும் பயணிகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதுதொடர்பாக நீதிபதிகள் ஏ.கே.கோயல், ஆர்.எப்.நாரிமன் கொண்ட அமர்வு விசாரணை நடத்தியது. இதில், ரயில் பயணிகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக பல்வேறு மாநில உயர் நீதிமன்றங்கள் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.
குறிப்பாக 1984ம் ஆண்டு ரயில்வே சட்டம் 124 ஏ பிரிவின்படி ரயில் முன் பாய்ந்து உயிர் இழந்தாலோ அல்லது தற்கொலை முயற்சியில் காயம் அடைந்தாலோ இழப்பீடு வழங்குவது இல்லை. ஆனால், இதற்கு சில நீதிமன்றங்கள் உத்தரவிட்டன.
இதுபோன்ற முரண்பாடான தீர்ப்புகள் குறித்து உச்ச நீதிமன்றம் விசாரித்தது. இதில், 124வது பிரிவு மற்றும் 124வது பிரிவு படி உயிரிழக்கும் ரயில் பயணிகளுக்கு இழப்பீடு வழங்குவது ரயில்வேயின் கடமையாகும்.
அதனால், ரயில் பயணத்தின்போதோ அல்லது ரயிலில் இருந்து இறங்கும் போதோ தவறி விழுந்து இறந்தாலோ, காயம் அடைந்தாலோ இழப்பீடு வழங்குவது ரயில்வேயின் கடமை என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.