கர்நாடகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியே தொடரும் என்று வாங்குப்பதிவுக்கு பிறகு நடத்திய கருத்துக் கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது.
கர்நாடக மாநில சட்டசபைக்கு உட்பட்ட 222 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், மொத்தம் 70 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பிரபல ஊடகங்கள் வாக்குப்பதிவுக்கு பிறகு நடத்திய கருத்துக் கணிப்புகள் நடத்தி வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, காங்கிரஸ் கட்சி தான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆட்சி அமைக்க தேவையான 113 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெரும் என்று பெரும்பாலான ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், முன்னாள் பிரதமர் தேவகவுடா தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் 30 முதல் 40 இடங்களில் வெற்றி பெரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதனால், காங்கிரஸ் அல்லது பாஜக கட்சியின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சிக்கலாம் என்றும் கருத்துக் கணிப்பில் கூறப்படுகிறது.