தென்மேற்குப் பருவமழை வழக்கத்துக்கு மாறாக கணிக்கப்பட்டதிலிருந்து நான்கு நாள்கள் முன்னதாகவே தொடங்க உள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.
கோடைக்காலத்தின் அக்னி நட்சதிரம் முடிய தென்மேற்குப் பருவமழை தொடங்கும். இந்தாண்டில் தென்மேற்குப் பருவமழை ஜூன் 1-ம் தேதி முதல் தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.
ஆனால், வருகிற மே 28-ம் தேதி முதலே தென்மேற்குப் பருவமழை தொடங்க உள்ளது. வருகிற 20-ம் தேதி அந்தமான் நிக்கோபார் தீவுகளில் தொடங்கும் பருவ மழை, படிப்படியாக இலங்கை மார்க்கமாக வங்காள விரிகுடாவில் மே 24-ம் தேதி வந்தடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மே 28-ம் தேதி முதல் கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தொடங்குகிறது. இந்தாண்டு பருவமழை சாதாரணமாகவே இருக்கும் என்றும் எந்த கடுமையான சீற்றமும் இருக்காது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.