70 நாட்களில் 21 லட்சம் - குஜராத் விவசாயி சாதனை

70 நாட்களில் 21 லட்சம் - விவசாயி சாதனை

May 15, 2018, 22:15 PM IST

குஜராத் மாநிலம் பனாக்சந்தா மாவட்டத்தை சேர்ந்தவர் கேடாஜி சோலங்கி. 41 வயதான இவர், உருளைக்கிழங்கு விவசாயம் செய்து வந்தார்.

உருளைக்கிழங்குக்கு போதிய விலை கிடைக்காத காரணத்தால், கடந்த பிப்ரவரி மாதம் இவர் தனது 4 ஏக்கர் நிலத்தில் முலாம் பழம் (கிர்ணி) விளைவிக்க முடிவு செய்தார்.

இவர் ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலும், மொபைல் ஃபோன் செயலிகள் மூலம் நவீன விவசாய தொழில்நுட்பங்களை அறிந்து அவற்றை உபயோகிப்பதில் ஆர்வம் கொண்டவர்.

அதன்படி தரமான விதை, சொட்டு நீர்ப்பாசனம் மற்றும் சூரியசக்தி மூலம் இயங்கும் நீரிறைக்கும் இயந்திரம் ஆகியவற்றை பயன்படுத்தினார். மொத்தமாக அவர் 1 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் மட்டும் செலவு செய்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் வரையிலான 70 நாட்களில் 140 டன் முலாம்பழம் இவரது நிலத்தில் விளைந்துள்ளது. இதை 21 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார் சோலங்கி.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading 70 நாட்களில் 21 லட்சம் - குஜராத் விவசாயி சாதனை Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை