`ரிசார்ட்டுக்குப் போகத் தயார்..!- சித்தராமையா ஆதங்கம்

by Rahini A, May 16, 2018, 15:08 PM IST

பாஜக-வின் வியூகங்களைத் தடுக்க ரெசார்ட்டுக்குப் போகவும் தயார் என்று கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

கடந்த 12-ம் தேதி கர்நாடக மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் மற்றும் பாஜக-வுக்கு இடையில் நேரடி போட்டி இருந்தாலும், மதச்சார்பற்ற ஜனதாதள கட்சிக்கும் குறிப்பிடத்தக்க செல்வாக்கு இருந்தது.

இதனால், மும்முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 222 தொகுதிகளுக்கும் முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டன. பாஜக 104 தொகுதிகளிலும், காங்கிரஸ் 78 தொகுதிகளிலும், மஜத 37 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

எந்தவொரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ்-மஜத கூட்டணி வைத்துள்ளன. அதே நேரத்தில் சற்று முன்னர் அம்மாநில கவர்னரைச் சந்தித்த எடியூரப்பா, `நான் நாளை முதல்வராக பொறுப்பேற்பேன்’ என்று சவால் விட்டுள்ளார். நிலைமை இப்படி போய்க்கொண்டிருக்கையில், காங்கிரஸ் மற்றும் மஜத கட்சி எம்.எல்.ஏ-க்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது பாஜக.

இதற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மஜத கட்சியின் சட்டமன்றத் தலைவர் குமாரசாமி, `பாஜக-வைப் போன்று ஜனநாயகத்தையும் அரசியல் சட்ட சாசனத்தையும் இந்த நாட்டில் எவரும் குழி தோண்டி புதைத்ததில்லை.

அவர்கள் குதிரைபேரம் மூலம் எங்கள் பக்கம் இருந்த ஒருவரை இழுக்க நினைத்தால், நாங்கள் அவர்கள் பக்கமிருந்து இருவரை இழுத்து விடுவோம்’ என்று வெளிப்படையாகவே மிரட்டல் விடுத்துள்ளார். இந்நிலையில், கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் சித்தராமையா, `காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதள கட்சி எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம்.

ஆனால், பாஜக ஆட்சி அமைக்க குதிரைபேரத்தை கையிலெடுத்துள்ளது. இது நரேந்திர மோடியின் உத்தரவின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளது. அவர்கள் ஆட்சி அரியணையில் ஏற எதுவும் செய்வர். எனவே காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைய எங்கள் தரப்பு எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் ரிசார்ட்டில் தங்கவும் தயாராக இருக்கிறோம்’ என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

 

You'r reading `ரிசார்ட்டுக்குப் போகத் தயார்..!- சித்தராமையா ஆதங்கம் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை