பாஜக-வைச் சேர்ந்த எடியூரப்பா ராஜினாமா செய்ததை அடுத்து ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்தித்தார் குமாரசாமி. இதனைத் தொடர்ந்து வரும் 21-ஆம் தேதி கர்நாடக முதலமைச்சராக பதவி ஏற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆட்சியை தக்கவைத்து கொள்ள சட்டசபையில் போதுமான பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், முதலமைச்சர் எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களைச் சேர்த்து 117 உறுப்பினர்களின் ஆதரவை பெற்ற தன்னை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று உரிமை கோரியிருந்த குமாரசாமி ஆளுநரை சந்தித்தார்.
இதனைத் தொடர்ந்து வரும் 21-ஆம் தேதி பிற்பகல் 12.30 மணியளவில் கர்நாடக மாநில முதலமைச்சராக குமாரசாமி பதவி ஏற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.