15 நாள் கிடைத்திருந்தால் ஜெயித்திருப்போம்- பொங்கும் அமித் ஷா!

by Rahini A, May 20, 2018, 15:07 PM IST

’15 நாள்கள் மட்டும் கிடைத்திருந்தால் இந்நேரத்தில் எடியூரப்பா வென்றிருப்பார்’ எனப் பேசியுள்ளார் அமித் ஷா.

கடந்த 12-ம் தேதி நடந்த கர்நாடக மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 222 தொகுதிகளில் பாஜக 104 தொகுதிகளிலும், காங்கிரஸ் 78 தொகுதிகளிலும், மஜத 37 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

எந்தவொரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ்-மஜத கூட்டணி வைத்தன. ஆனால், தனிப்பெரும்பான்மை என கால அவகாசத்துடன் பாஜக-வின் எடியூரப்பா முதல்வர் ஆனார். 

ஆனால், பெரும்பான்மை இன்றி தற்போது முதல்வர் பதவி காங்கிரஸ்- மஜக கூட்டணியில் குமாரசாமிக்கு கிடைத்துள்ளது. இதுகுறித்து பாஜக-வின் தேசியத் தலைவர் அமித் ஷா கூறுகையில், “15 நாள்கள் மட்டும் நாங்கள் கேட்டிருந்த கால அவகாசம் கிடைத்திருந்தால் நாங்கள் வெற்றி பெற்றிருப்போம். எடியூரப்பா முதல்வர் ஆகியிருப்பார்.

15 நாள்களில் மக்களே காங்கிரஸ்- மஜக கூட்டணி சரியானது அல்ல என்பதை தீர்மானித்திருப்பார்கள். இன்னும் ஓராண்டு பொறுத்துக்கொள்ளுங்கள். அடுத்த ஆண்டின் மிகப்பெரிய தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றி பெறும்” என்றார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading 15 நாள் கிடைத்திருந்தால் ஜெயித்திருப்போம்- பொங்கும் அமித் ஷா! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை