காங்கிரஸுக்கு மம்தா வாழ்த்து: பாஜக-வுக்கு எதிரான கூட்டணி அமையுமா!?

by Rahini A, May 20, 2018, 20:48 PM IST

காங்கிரஸ் கட்சியின் நெடுநாள் எதிரியான மம்தா பானர்ஜி, தற்போது இணக்கமான போக்கை கடைபிடித்துள்ளார்.

கடந்த 12-ம் தேதி கர்நாடக மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் மற்றும் பாஜக-வுக்கு இடையில் நேரடி போட்டி இருந்தாலும், மதச்சார்பற்ற ஜனதாதள கட்சிக்கும் குறிப்பிடத்தக்க செல்வாக்கு இருந்தது.

இதனால், மும்முனை போட்டி நிலவியது. இறுதியில் 222 தொகுதிகளில் பாஜக 104 தொகுதிகளிலும், காங்கிரஸ் 78 தொகுதிகளிலும், மஜத 37 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. எந்தவொரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ்-மஜத கூட்டணி வைத்தன.

அதே நேரத்தில், `நாங்கள் தான் தனிப் பெரும் கட்சியாக விளங்குகிறோம். எனவே எங்களைத்தான் ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுக்க வேண்டும்’ என்று பாஜக தரப்பு கூறியது. பாஜக-வால் நியமிக்கப்பட்ட கவர்னர் பலரும் எதிர்பார்த்தது போலவே எடியூரப்பாவை முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

இதற்கு அடுத்ததாக எடியூரப்பா தலைமையிலான அரசு தனது மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், நேற்று வாக்கெடுக்குப்புக்கு முன்னரே பதவி விலகினார் எடியூரப்பா. இதையடுத்து, குமாரசாமி நாளை முதல்வராக பதவியேற்க உள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, `ஜனநாயகம் வென்றது. கர்நாடகாவுக்கு வாழ்த்துகள். தேவகௌடாவுக்கு வாழ்த்துகள். குமாரசாமிக்கு வாழ்த்துகள். காங்கிரஸுக்கு வாழ்த்துகள். பிராந்திய கட்சியகளின் வெற்றி இது’ என்று புகழ்ந்துள்ளார்.

ஏற்கெனவே பாஜக-வுக்கு எதிரான போக்கு நாடு முழுவதும் நிலவி வரும் நிலையில், காங்கிரஸுடன் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மம்தாவின் ட்வீட் சிக்னல், திரிணாமூல் காங்கிரஸும் பாஜக-வுக்கு எதிரான அந்தக் கூட்டணியில் இணையும் என்று சொல்கிறதோ என்னவோ?

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

 

You'r reading காங்கிரஸுக்கு மம்தா வாழ்த்து: பாஜக-வுக்கு எதிரான கூட்டணி அமையுமா!? Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை