சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் டி.டி.வி.தினகரனுக்கு பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் அறிவித்தது.
ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள், சுயேச்சைகள் உள்பட 58 பேர் இடைத்தேர்தலில் களமிறங்க தயாராக உள்ளனர். வேட்பு மனு பரிசீலனையில் ஜெ.தீபா, நடிகர் விஷால் உள்பட 73 பேரின் மனு நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று மாலை சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி தொடங்கியது. இதில், ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் டி.டி.வி.தினகரனுக்கு பிரஷர் குக்கர் சின்னமும், நமது கொங்கு முன்னேற்ற கழகத்துக்கு தொப்பி சின்னமும், ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.இதுதொடர்பாக டி.டி.வி.தினகரன் கூறுகையில்,” துரோகிகளின் பிரஷரை அதிகரிக்கவே குக்கர் சின்னத்தை தேர்ந்தெடுத்ள்ளோம்” என தெரிவித்தார்.டி.டி.வி.தினகரன் கேட்டிருந்த தொப்பி, கிரிக்கெட் பேட், விசில் ஆகிய மூன்று சின்னங்களும் அவருக்கு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.