நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளி, கல்லூரிகளிலும் இனி கட்டாயம் சானிட்டரி நாப்கின்கள் வைத்திருக்க வேண்டும் என கோரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சானிடரி நாப்கின் நாட்டில் இருக்கும் அனைத்து பள்ளி மட்டும் கல்லூரிகளில் இருக்க வேண்டும் என தேசிய பெண்கள் ஆணையம் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகருக்கும் கடிதம் எழுதியுள்ளது.
தேசிய பெண்கள் ஆணையம் எழுதிய கடிதத்தில், `இந்தயாவில் பள்ளியில் பயிலும் பெண் குழந்தைகளில் 23 சதவிகிதம் பேர் சுகாதாரமான சானிடரி நாப்கின் பேட்கள் இல்லாத காரணத்தினாலேயே படிப்பதை நிறுத்திக் கொள்கின்றனர். சுகாதார விஷயத்தில் பள்ளியில் படிக்கும் பெண் குழந்தைகள் அதிகம் பாகிக்கப்படுகின்றனர்.
எனவே, சுகாதாரமான வகையில் நாப்கின் பேட்கள் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். மேலும், உபயோகப்படுத்திய நாப்கின்களை எரிக்கும் வகையில் இன்சினரேட்டரையும் கல்வி நிறுவன வளாகத்திலேயே பொருத்த வேண்டும்' என்று மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
சமீபத்தில், புனே கார்பரேஷன், தன் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளுக்கு இலவச நாப்கின் பேட்களை கொடுக்கும் முடிவை எடுத்துள்ளது. இதனால் 23,000 பெண் குழந்தைகள் பயன் பெறுவர் என்று கூறப்படுகிறது. சானிடரி நாப்கின் பேட்களுக்கு இந்தியாவில் 12 சதவிகித வரி போடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.