மூன்று நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, இன்று அமெரிக்கா சென்றடைந்தார்.
வாஷிங்டனில் அவருக்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. விர்ஜினியாவில் இன்று அமெரிக்க நிறுவனங்களின் 20 தலைமை செயல்அதிகாரிகள் கூட்டத்தில் உரையாற்றுகிறார். ஆப்பிள் நிறுவனர் டிம் குக், கூகுள் தலைவர் சுந்தர்பிச்சை, மைக்ரேதாசாஃப்ட் தலைமை செயல்அதிகாரி சத்ய நாதெல்லா ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். பின்னர் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றுகிறார். இந்த நிகழ்வில் 600 இந்தியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திங்கட்கிழமை மதியத்துக்கு மேல் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை பிரதமர் மோடி சந்திக்கிறார். இரு தலைவர்களும் 5 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். வெள்ளைமாளிகையில் மோடிக்கு இரவுவிருந்து அளிக்கப்படுகிறது. ட்ரம்ப் அமெரிக்க அதிபராக பதடிவியேற்ற பின்னர், வெள்ளைமாளிகைளில் இரவு விருந்து அளிக்கப்படும் முதல் உலகத்தலைவர் மோடிதான். இரு தலைவர்களும் சேர்ந்து செய்தியாளர்களைச் சந்திக்கப் போவதில்லை. தனித்தனியான அறிவிக்கை மட்டும் வெளியிடப்படும்.
டொனால்ட் ட்ரம்புடனான சந்திப்பின் போது , ராணுவ ஒத்துழைப்பு, ஹெச்1பி விசா, பொருளாதார அளவிலான ஒத்துழைப்பு, தீவிரவாதத்தை கட்டுப்படுத்துதல் போன்றவை குறித்து மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறதார்ர