பிரதமர் மோடி இந்தோனேஷியாவில் பட்டம்விட்டு விளையாடிக் கொண்டிருப்பது இன்றைய சூழலில் நாட்டு மக்கள் மேல் ஒரு நாட்டுப் பிரதமர் வைத்திருக்கும் பற்றுதலைக் காட்டுகிறது.
மூன்று நாடுகள் சுற்றுப்பயணமாக மோடி முதலில் இந்தோனேஷியா சென்றுள்ளார். அடுத்தடுத்து மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும் செல்ல உள்ளார். கடோரப் பாதுகாப்பை வலுப்படுத்த கடலோர நட்பு நாடுகளின் நட்பை வலுப்படுத்தவே இந்த சுற்றுப்பயணம் எனக் கூறப்படுகிறது.
இன்று இந்தோனேஷிய அதிபர் உடன் பட்டம்விட்டு விளையாடிய பின்னர் மோடி பேசுகையில், “ஊழலற்ற நாடாக இந்தியாவை ஆக்க வேண்டும் என்பதே மத்திய பாஜக அரசின் குறிக்கோள். குடிமக்களை மையமாக கொண்ட, வளர்ச்சிக்கு உகந்த நாடாகவும் இந்தியா மாற்றப்படும்.
சர்வதேச நாடுகளுக்கும் இந்தொனேஷியாவுடனும் இணைந்து தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும்” என இந்தோனேஷியாவாழ் இந்தியர்களிடம் மோடி பேசினார்.