சிறுமி ஹாசினி மற்றும் பெற்ற தாலை கொலை செய்த வழக்கில் மும்பையில் கைதாகி சென்னைக்கு அழைத்து வரப்பட்ட தஷ்வந்திடம் 12 மணி நேரம் விசாரணை நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
சிறுமி ஹாசினியை தொடர்ந்து, பணத்திற்காக தாயையும் கொலை செய்த வழக்கில் போலீஸ் பிடியில் இருந்து தப்பிய தஷ்வந்தை மும்பையில் போலீசார் மீண்டும் கைது செய்தனர்.
சென்னை மவுலிவாக்கத்தில் வசித்து வந்த சாப்ட்வேர் இன்ஜினியர் பாபுவின் மகள் ஹாசினியை (6) கடந்த பிப்ரவரி மாதம் அதே கட்டிடத்தில் வசித்து வந்த தஷ்வந்த் என்ற இளைஞர் பலாத்காரம் செய்து கொலை செய்தான். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தஷ்வந்தை கைது செய்தனர். பின்னர், கடந்த செப்டம்பர் மாதம் தஷ்வந்தை உயர் நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்தது. இதன்பிறகு, தஷ்வந்த் தனது குடும்பத்துடன் குன்றத்தூரில் வசித்து வந்தார்.
இதைதொடர்ந்து, கடந்த வாரம் தஷ்வந்த் தனது தாயிடம் குடிக்க பணம் கேட்டதாக தெரிகிறது. ஆனால் அவரது தாய் பணம் கொடுக்க மறுத்ததால், வீட்டில் இருந்த 25 சவரன் நகையை திருடி, தாயை கொலை செய்துவிட்டு தப்பினான். இந்த சம்பவம் தொடர்பாக தஷ்வந்தின் தந்தை போலீசில் புகார் தெரிவித்தார். மீண்டும் வழக்கு பதிவு செய்த போலீசார், 3 தனிப்படை அமைத்து தஷ்வந்தை தேடி வந்தனர்.
இதற்கிடையே, மும்பை பாந்த்ரா பகுதியில் தலைமறைவாக இருந்த தஷ்வந்தை தமிழக போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இந்நிலையில், கைது செய்த தஷ்வந்தை மும்பையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்துவர போலீசார் முடிவு செய்திருந்தனர். அதற்காக, பாந்த்ராவில் இருந்து புறப்படும்போது தஷ்வந்த அங்கிருந்து தப்பினான். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தஷ்வந்தை போலீசார் மீண்டும் தீவிரமாக தேடி வந்தனர்.
அப்போது, அந்தேரி பகுதியில் தஷ்வந்தை போலீசார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். இந்நிலையில், இந்த கொலை வழக்கு தொடர்பாக தஷ்வந்திடம் 12 மணி நேரம் விசாரணை நடத்தியதா போலீசார் தெரிவித்தனர். மேலும், விசாரணையில், தாய் சரளாவை கொலை செய்ததை தஷ்வந்த ஒப்புக்கொண்டுள்ளான். இதை தவரி, இந்த கொலையில் தஷ்வந்திற்கு உதவி செய்த அவரது நண்பர்களான தாஸ் மற்றும் டேவிட் ஆகியோர் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.