மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்டு வரும் அடல் பென்சன் யோஜ்வனா திட்டத்தின் மூலம் மாதாந்திரம் ஓய்வூதியத்தை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளதாக அறவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் அடல் பென்சன் யோஜ்னா திட்டம் கடந்த 2015ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் இணையும் 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்களுக்கு 60 வயதுக்கு பின்பு 5 அடுக்குகளின் ஆயிரம் ரூபாய் முதல் ரூ.5 ஆயிரம் வரை மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில், இதுவரை 1.02 கோடி சந்தாதாரர்கள் இணைந்துள்ளனர்.
இதைதொடர்ந்து, பணவீக்கம், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட காரணத்தால் 20 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் தொகை போதுமானதாக இருக்காது என்பதால், இதுகுறித்து பரிசீலனை செய்யும்படி மத்திய அரசுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வந்தன.
இதுகுறித்து, ஓய்வூதிய நிதி கட்டுப்பாடு மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் ஹேமந்த் ஜி.கான்டிராக்டர் கூறுகையில், “அடல் பென்சன் யோஜ்னா திட்டத்தில் அதிகபட்ச மாதாந்திர ஓய்வூதியத்தை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதுதொடர்பான பரிந்துரையை நிதி அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறோம்” என்றார்.
அடல் பென்சன் யோஜ்னா திட்டத்திற்கான வயது வரம்பை 18ல் இருந்து 50 ஆக உயர்த்தவும் பெட்ரா பரிந்துரை செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.