இந்தியாவில் மனித உரிமை மீறல்: ஐநா கண்டனம்

by Rahini A, Jun 14, 2018, 17:25 PM IST

இந்தியாவின் ஜம்மு காஷ்மீரிலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலும் மனித உரிமை மீறல்கள் தொடர் கதையாக உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியா இனிமேலாவது காஷ்மீர் மக்களின் தனி உரிமை மீதும் கவனம் செலுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டு கேட்டுக் கொண்டுள்ளது.

ஐநா மனித உரிமைகள் ஆணையம் தலைவர் ஜெயித் ராஅத் ஹுசேன் “2016-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் நடந்த படுகொலைகள்” மற்றும் மக்கள் கூட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வர பெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்துவது” என இரு பிரச்னைகள் மிது உடனடி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

காஷ்மீர் மீது இதுதொடர்பான குற்றச்சாட்டு எழுவது இதுவே முதல் முறை. இதற்கு முன்னர் ஐநா-வின் தலைவர் இதுபோல் ஒரு விசாரணையை சிரியா பிரச்னையின் போதே மேற்கொள்ள உத்தரவிட்டார். தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே எல்லை மீறல் நடப்பதும் அதன் மூலம் துப்பாக்கிச்சூடுகள் தொடர்வதும் தொடர் கதையாகி உள்ளது.

ஐநா தலைவர் இரு நாடுகளின் தூதுவர்களையும் சந்தித்து உள்ளார். அவர்களிடம் 2016-ம் ஆண்டு ஜூலை மாத வன்முறை குறித்தும் அதற்கு முன்னர் ஹிஜ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி புர்கான் வானி கொலை குறித்தும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

 

 

You'r reading இந்தியாவில் மனித உரிமை மீறல்: ஐநா கண்டனம் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை