வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு: மேனகா காந்தி

Advertisement

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்காக இந்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதன் அடிப்படையில் அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்திய பெண்களையோ அல்லது ஆண்களையோ திருமணம் செய்தால் 7 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். இல்லையெனில் அவர்களுக்கு பாஸ்போர்ட் மற்றும் விசா வழங்கப்படாது” எனக் கூறியுள்ளார்.

முன்னதாகக் கடந்த வாரம் வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்திய பெண்களையோ அல்லது ஆண்களையோ திருமணம் செய்தால் 48 மணி நேரத்துக்குள் பதிவு செய்வது அவசியம் என மேனகா காந்தி அறிவித்திருந்தார்.

ஆனால், நேற்று முக்கிய நலத்துறை அமைச்சர்களுடன் நடந்த ஆலோசனைக்குப் பிறகு ஏழு நாள் அவகாசமாக அறிவித்துள்ளார். 

Advertisement
/body>