பல்லாயிரம் கோடி ரூபாய் பண மோசடி குற்றச்சாட்டில் சிக்கியுள்ள நிரவ் மோடியை இந்தியாவுக்குக் கொண்டு வர சிபிஐ பல மாதங்களாக முயன்று வருகிறது.
இந்நிலையில், அவர் இங்கிலாந்தில் தலைமறைவாக இருப்பதாக தொடர்ந்து தகவல் வந்து கொண்டிருக்கிறது. இதனால், இங்கிலாந்து அரசிடம் இந்தியா, நிரவ் மோடியை தங்கள் நாட்டுக்கு அனுப்புமாறு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தது.
இந்நிலையில், நிரவ் மோடியை இந்தியாவுக்கு கூட்டிச் செல்ல உள்ள சட்ட நடைமுறைகளை பின்பற்றலாம் என்று இங்கிலாந்து அரசு அதிகாரபூர்வமாக தெரிவித்துவிட்டது. எனவே, சீக்கிரமே மோடியை சொந்த நாட்டுக்குக் கொண்டு வரும் நடவடிக்கைகளை இந்தியா எடுக்கும் என்று தெரிகிறது.
இது ஒருபுறமிருக்க, நிரவ் மோடி எங்கு தலைமறைவாக இருக்கிறார் என்பது தெரியவில்லை. அவர் கடைசியாக பிப்ரவரி மாதம் இங்கிலாந்து நாட்டிற்கு வந்தததாக கூறப்படுகிறது. ஆனால், அவர் இந்தியாவை விட்டு வெளியேறியதற்கான ஆவணங்கள் இல்லை. அதேபோல, கடந்த மார்ச் மாதம் அவர் இங்கிலாந்திலிருந்து பிரான்ஸ் நாட்டுக்குச் சென்றிருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.