பாதுகாக்கும் போலீஸாரே அத்துமீறலாமா? வைரலாகும் வீடியோ!

by Rahini A, Jun 21, 2018, 16:19 PM IST

மும்பை ரயில் நிலையம் ஒன்றில் ரயில்வே காவலர், பெண் ஒருவரை சீண்டும் வீடியோ காட்சி சில நாட்களுக்கு முன்னர் வைரலாக பரவியது.

இதையடுத்து, அந்த காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். சில நாட்களுக்கு முன்னர் சமூக வலைதளங்களில் வைரலான அந்த வீடியோ பதவில், மும்பையில் இருக்கும் கல்யாண் ரயில் நிலையத்தில் பெண் ஒருவரது பக்கத்தில் ரயில்வே காவலர் ஜஹாங்கீர் அமர்ந்திருக்கிறார்.

கால் மேல் கால் போட்டபடி பெண்ணை தவறுதலாக சீண்டுகிறார் ஜஹாங்கீர். இதையடுத்து, அருகில் இருக்கும் சக பயணிகள், ஜஹாங்கீரை முற்றுகையிடுகின்றனர். அந்த இடத்திலிருந்து காவலர் ஜஹாங்கீர் தப்பித்துச் செல்ல முயல்கிறார். அப்போது, அருகிலிருந்தவர்கள் அவரைப் பிடித்து விடுகின்றனர்.

இந்த வீடியோ வைரலான நிலையில், மத்திய ரயில்வே துறையின் டிவிஷ்னல் கமிஷனர், சச்சின் பாலோட், காவலர் ஜஹாங்கீரை பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர், ‘இந்த விவகாரம் குறித்து எனக்குத் தகவல் வந்த உடனேயே, சம்பந்தப்பட்ட காவலரை அழைத்து விசாரணை செய்தேன்.

பின்னர், சஸ்பெண்ட் உத்தரவை உடனடியாக பிறப்பித்தேன். பெண்கள் பாதுகாப்புக்காக ரயில்வே துறையில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்றவரிடம், ‘காவலர் மீது பாலியல் தொந்தரவு வழக்கு பதியப்படுமா?’ என்று கேட்டதற்கு, ‘அது சம்பந்தமாக எங்களுக்கு புகார் எதுவும் வரவில்லை. ஆனால், வீடியோ ஆதாரம் கொண்டு தான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம்’ என்று தெரிவித்து விட்டார். 

You'r reading பாதுகாக்கும் போலீஸாரே அத்துமீறலாமா? வைரலாகும் வீடியோ! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை