காவிரி ஆணையத்துக்கான கர்நாடகா உறுப்பினர்கள் நியமனம்!- குமாரசாமி

Advertisement

காவிரி மேலாண்மை வாரியத்துக்கான கர்நாடகா மாநில உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கு மத்தியில் காவிரி நதி நீரை பங்கிட்டுக் கொள்வதில் கடந்த பல வருடங்களாக பிரச்னை நிலவி வந்தது. இதில் கர்நாடகா, காவிரி ஆற்றில் அணைகள் கட்டி, மற்ற மாநிலங்களுக்குத் தேவையான நீரை திறந்து விடாமல் வஞ்சித்து வந்தது.

இது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் கடந்த மே மாதம் 19 ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. அந்த தீர்ப்பில், `மத்திய அரசு, நான்கு மாநிலங்களுக்கு மத்தியில் நிலவி வரும் நீர் பங்கீட்டுப் பிரச்னையைத் தீர்க்க உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்.

பருவ மழை ஆரம்பிப்பதற்கு முன்னர் வாரியம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்' என்று கூறி காவிரி பங்கீடு தொடர்பான வழக்கை முடித்து வைத்தது. இதையடுத்து, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு அமைத்து நீர் வளத் துறைத் தலைவர் மசூத் ஹூசைனைத் தலைவராக நியமித்து வாரியம் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான கர்நாடக மாநில உறுப்பினராக நீர்வளத்துறை செயலாளர் ராகேஷ்சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி அறிவித்துள்ளார்.

மேலும், காவிரி ஒழுங்காற்று குழுவின் கர்நாடக உறுப்பினராக பிரசன்னா நியமனம் செய்யப்பட்டுள்ளார். கூடுதலாக, 'காவிரி ஆணைய விவகாரத்தில் 3 நாளில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும். கூட்டத்தில் கர்நாடக மாநில எம்பிக்களும் கலந்து கொள்வார்கள்’ என்றும் கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

Advertisement
மேலும் செய்திகள்
guarantee-signature-required-mudra-loan-increase-to-20-lakhs-who-will-get-it
கியாரண்டி கையெழுத்தே தேவையில்... முத்ரா லோன்... 20 லட்சமாக உயர்வு... யார் யாருக்கு கிடைக்கும்?
a-trainee-ias-officer-a-thousand-lies-fortunately-people-escaped
ஒரு பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியும்... ஆயிரம் பொய்களும்... நல்ல வேளை மக்கள் தப்பிச்சாங்க!
students-who-did-not-wear-double-braids-teachers-who-took-scissors-in-hand-officials-who-suspended-them-in-action
இரட்டை ஜடை போடாத மாணவிகள்... கத்தரியை கையில் எடுத்த ஆசிரியர்கள்... அதிரடியாக சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள்
bir-mohammed-caught-in-pocso-panchayat-held-in-jamaat
போக்சோவில் சிக்கிய பீர் முகமது... ஜமாத்தில் நடந்த கட்டி வைத்து நடந்த பஞ்சாயத்து
gitari-film-actress-who-entered-wayanad-landslide
வயநாடு நிலச்சரிவு... பரபரவென களத்தில் இறங்கிய கிடாரி பட நடிகை... நீளும் உதவிக்கரங்கள்...
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
/body>