சுஷ்மா, நிர்மலா ஆகியோரை சந்திக்க அமெரிக்கா மறுப்பு!

by Rahini A, Jun 28, 2018, 11:21 AM IST

அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் ராணுவத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை அமெரிக்க அமைச்சர்கள் சந்திக்க உள்ளதாக இருந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், ‘தவிர்க்க முடியாத சில காரணங்களுக்காக’ இரு நாட்டு அமைச்சர்களின் சந்திப்பை அமெரிக்கா ரத்து செய்துள்ளது. இந்த சந்திப்பு குறித்து சில மாதங்களுக்கு முன்னரே முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிரதமர் மோடி, அமெரிக்காவுக்கு பயணம் செய்து அதிபர் டொனால்டு ட்ரம்பை சந்தித்தார். அப்போதே, இரு நாட்டுக்கும் இடையில் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்துவது குறித்து ஒப்புக் கொள்ளப்பட்டது. இதையடுத்து, இந்த ஆண்டு தொடக்கத்தில் மத்திய அமைச்சர்களுக்கு மத்தியில் பேச்சுவார்த்தை நடக்கும் என்று கூறப்பட்டது.

ஆனால், ட்ரம்ப் தலைமையிலான அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டதால், பேச்சுவார்த்தை நடக்காமல் தள்ளிப் போனது. பலகட்ட யோசனைக்குப் பிறகுதான் அடுத்த வாரம் இரு நாட்டு மத்திய அமைச்சர்களும் சந்திக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்தப் பேச்சுவார்த்தைக்காக இந்தியாவிலிருந்து வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் ராணுவத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்காவுக்கு பயணம் செய்ய இருந்தனர். அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கெல் ஆர். போம்பியோ மற்றும் ராணுவத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் ஆகியோருடன் இந்திய அமைச்சர்கள் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

You'r reading சுஷ்மா, நிர்மலா ஆகியோரை சந்திக்க அமெரிக்கா மறுப்பு! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை