மகாராஷ்டிராவில் குழந்தை கடத்தல்க்காரர்கள் என நினைத்து அடித்துக் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் துலே மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் வசிக்கும் கிராமம் ரெயின்பாதா. வெளியூரை சேர்ந்த நபர்கள் சிலர் இக்கிராமத்திற்கு பேருந்தில் வந்திறங்கினர்.
அப்போது, வெளியூரை சேர்ந்த நபர்களில் ஒருவர் அங்கிருந்த குழந்தையிடம் சாதாரணமாக பேச்சுக் கொடுத்தார். ஆனால், அவர்களை கடத்தல்காரர்கள் என நினைத்த அப்பகுதி மக்கள் வெளியூர் நபர்களை கொடூரமாக தாக்க தொடங்கினர். இந்த சம்பவத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதன்பிறகு போலீசார் நடத்திய விசாரணையில் வெளியூரை சேர்ந்த நபர்கள் குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் இல்லை என்பது தெரியவந்தது.
இந்நிலையில், குழந்தை கடத்தல் கும்பல் என சந்தேகித்து அடித்துக் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு அளிக்கப்படும் என மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவில் இன்று அறிவித்தார்.