பயணிகள் டிஜிட்டல் அடையாள அட்டையைப் பயன்படுத்தலாம் - ரயில்வே

டிஜிட்டல் அடையாள அட்டையைப் பயன்படுத்தலாம் - ரயில்வே

Jul 6, 2018, 07:57 AM IST

ரயில் யணத்தின்போது அடையாள அட்டையாக டிஜிட்டல் ஆதார் அட்டை, டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்டவற்றை பயன்படுத்தலாம் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

Train

ரயில் பயணிகள் மத்திய-மாநில அரசுகள் வழங்கிய ஓரிஜினல் அடையாள அட்டைகளில் ஒன்றை பயணத்தின் போது வைத்திருக்க வேண்டியது கட்டாயம்.

அதன்படி ஆதார், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட அட்டைகள் ஏற்கப்படுகின்றன. இதனால் பயணிகளின் ஒரிஜினல் அட்டைகள் சில நேரங்களில் தொலைந்து விடும் வாய்ப்பு ஏற்படுகிறது.

இதை தடுப்பதற்காக டிஜிட்டல் ஆதார் மற்றும் டிரைவிங் லைசென்சை காட்டி பயணம் செய்யலாம் என ரெயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து அனைத்து மண்டல முதன்மை தலைமை வணிக மேலாளர்களுக்கு ரெயில்வேத்துறை கடிதம் எழுதியுள்ளது.

அந்த கடிதத்தில்., “டிஜிலாக்கர் கணக்கில் ‘வழங்கப்பட்ட ஆவணங்கள்’ பிரிவில் உள்ள டிஜிட்டல் ஆதார் மற்றும் டிரைவிங் லைசென்சின் மென்நகல்களை ஒரு பயணி காட்டினால், அதை ஆதாரமாக ஏற்றுக்கொள்ளலாம்.

அதே நேரம் ‘பதிவேற்றப்பட்ட ஆவணங்கள்’ பிரிவில் இருக்கும் ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You'r reading பயணிகள் டிஜிட்டல் அடையாள அட்டையைப் பயன்படுத்தலாம் - ரயில்வே Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை