மந்திரங்களை உச்சரித்தால் விளைச்சல் அதிகரிக்கும் - அமைச்சரின் அடடே கருத்து

விவசாயிகளுக்கு கோவா விவசாய துறை அமைச்சர் விஜய் சர்தேசாயின் அறிவுரை

Jul 6, 2018, 09:46 AM IST

கோவாவைச் சேர்ந்த, சிவ யோகா பவுண்டேஷன் அண்டவெளி விவசாயம் என்ற புதிய விவசாய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தை தொடங்கி வைத்த கோவா விவசாய துறை அமைச்சர் விஜய் சர்தேசாய் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Vijay Sardesai

இது குறித்து அவர் பேசுகையில், “அண்டவெளி விவசாயத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்கள் பாதுகாப்பானவை, அவை ரசாயன உரங்கள் கலக்காமல் நச்சுத்தன்மை அற்றதாக இருக்கும்.

விவசாயிகள் தங்கள் வயல்வெளியில் நின்று தொடர்ந்து 30 நிமிடங்கள் வேத மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். இப்படி சொல்லும்போது அதிலிருந்து உருவாகும் அண்ட சக்தியால் நெற்பயிர்கள் அமோகமாக விளைச்சல் கொடுக்கும்.

இதற்கு சிவயோக விவசாயம் என்று பெயர். இந்த முறையினால் ஏராளமான விவசாயிகள் பலனடைந்துள்ளனர். இது எதிர்காலத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார்.

அமைச்சரின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதுடன், சர்ச்சையை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.

You'r reading மந்திரங்களை உச்சரித்தால் விளைச்சல் அதிகரிக்கும் - அமைச்சரின் அடடே கருத்து Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை