ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் இனி டிஜிட்டல் முறையில் ஆவணங்களை காண்பித்தாலே போதும் என மத்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் டிக்கெட் பரிசோதகடரிம் தங்களது அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும். குறிப்பாக, ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமை அட்டை போன்ற ஏதேனும் ஒன்றை காண்பிக்க வேண்டும். இதுவே நடைமுறையில் இருந்து வருகிறது.
ஆனால் இந்த நடைமுறையில் சற்று மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
அதாவது, மத்திய அரசின் டிஜி லாக்கர் என்கிற மொபைல் ஆப்பை பயணிகள் பதிவிறக்கம் செய்து, அதில் ஆதார் கார்டு மற்றும் ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றை சேமித்து வைத்துக் கொள்ளலாம். ரயிலில் பயணிக்கும்போது டிக்கெட் பரிசோதகரிடம் இந்த டிஜிட்டல் ஆவணங்களை காட்டினால்போதும். ஒரிஜினல் ஆதார் கார்டு மற்றும் ஓட்டுனர் உரிமம் ஆகியவை காண்பிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று மத்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஸ்மார்ட் போன்கள் வைத்திருப்பவர்கள் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், ஸ்மார்ட் போன்கள் வைத்து இல்லாதவர்கள் வழக்கம்போல் ஒரிஜினல் ஆவணங்களை காண்பிக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.