உத்தரப்பிரதேச மாநிலத்தில் சரியாக பணியாற்றாத அரசு ஊழியர்களுக்கு 50 வயதில் கட்டாய ஓய்வு வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
அரசு துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள் ஒழுங்காக பணியாற்றுவதில்லை என கூறப்படுவது வழக்கம். இதுபோன்ற அதிகாரிகள் மீது மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
அந்த வகையில், உத்தரபிரதேச மாநிலத்தில் அரசு அலுவலகங்களுக்கு கூடுதல் தலைமை செயலாளரிடம் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதில், கடந்த மார்ச் 31ம் தேதியில் இருந்து கணக்குப்படி 50 வயதுக்கு மேற்பட்ட அரசு ஊழியர்களை உயர் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். முறையாக பணியாற்றாத 50 வயதுக்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சட்டம் 1986ம் ஆண்டு முதல் இந்த நடவடிக்கை நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால், அரசு துறைகளில் இதை பின்பற்றப்படுவதில்லை. இந்த சட்டத்தை இனி வரும் காலங்களில் பின்பற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.