2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய பொருளாதாரம் தவறான பாதையில் பயணித்து வருவதாக கருத்து தெரிவித்துள்ளார் நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென்.
தலைநகர் புது டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமர்த்தியா சென், ‘2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா மிகத் தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. உலகின் அதி வேகமாக வளரும் பொருளாதாரமான நாம் பின் நோக்கி சென்று கொண்டிருக்கின்றோம்.
தென் கிழக்கு நாடுகளில் பாகிஸ்தானுக்குப் பிறகு நாம் தான் மிக மோசமான பொருளாதார கொள்கைகளைக் கொண்டுள்ளோம். நாட்டில் சமத்துவமின்மை, சாதி பாகுபாடு, பழங்குடியினர்களின் கோரிக்கைகள் ஆகியவற்றில் எந்த வித நடவடிக்கையும் தற்போது ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் எடுக்கவில்லை. பாதாள சாக்கடையை கையால் சுத்தம் செய்பவர்கள், கையால் மலம் அள்ளுபவர்களின் அடிப்படை கோரிக்கைகள் கூட மறுக்கப்பட்டுள்ளன.
சுதந்திரத்தின் போது, மதத்தை வைத்து அரசியலில் வெற்றி பெற்று விட முடியாத நிலை இருந்தது. ஆனால், இப்போது அப்படி இல்லை. அது தற்போது நடந்துவிட்டது. அதனால் தான் எதிர்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு நிற்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இது மோடிக்கும் ராகுலுக்கும் இடையில் நடக்கும் போட்டி அல்ல.
இது இந்தியா என்றால் என்ன என்பதற்கான போட்டி’ என்று கருத்து தெரிவித்துள்ளார். அமர்த்தியா சென், பாஜக-வின் பொருளாதார கொள்கைகள் மீதும் அரசியல் கொள்கைகள் மீதும் தொடர்ந்து விமர்சனம் வைத்து வருபவர் என்பது குறிப்பி