காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 80 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவ மழை நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, கர்நாடகா மற்றும் கேரள மாநிலத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக, கர்நாடகாவில் உள்ள அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிதது வருகிறது.
இதன் காரணமாக 124.8 அடி கொண்ட கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர் மட்டம் தற்போது 123 அடி தொட்டு அபாய கட்டத்தை எட்டியுள்ளது. இதனால், வினாடிக்கு 40 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
இதேபோல், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 35 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, 120 அடி கொண்ட பவானி சாகர் அணையில் 102 அடியும், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 21 அடியும் எட்டி உள்ளது.